
நாளை மறுதினம் (செப்-11) விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ள ‘யட்சன்’ படம் ரிலீஸாக இருக்கிறது. ஆர்யா, கிருஷ்ணா இருவரும் இணைந்து நடித்துள்ள இந்தப்படத்தின் டீசர் பரபரப்பை ஏற்படுத்தியது உண்மை.. அதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதும் உண்மை. முக்கியமான வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.
கதைப்படி நாயகன் ஆர்யா “சின்னா” என்னும் கதாபத்திரத்தில் தூத்துக்குடிகாரராக நடித்துள்ளார். அவர் ஊர் முழுவதும் கடன் வாங்கிவிட்டு சென்னைக்கு எஸ்கேப் ஆகி வருபவராக நடித்துள்ளார். இன்னொரு நாயகனான கிருஷ்ணா “கார்த்தி” கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு சினிமாவில் பெரிய ஹீரோவாக வேண்டும் என்பது லட்சியம். அதற்காக இவரது காதலியான சுவாதி இவரை அழைத்துக்கொண்டு கோடம்பாக்கத்து வருகிறார்.. அதன்பின் நடக்கும் விஷயங்களை சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக படமாக்கியிருக்கிறாராம் இயக்குனர் விஷ்ணுவர்தன்.
படத்தில் ஆர்யா வரும் காட்சிகள் அனைத்தும் சிகப்பு நிற டோனிலும், கிருஷ்ணா வரும் காட்சிகள் அனைத்தும் நீல நிற டோனிலும் வரும். ஆனால் கண்டிப்பாக அது ரசிகர்களின் கவனத்தை சிதைக்காது என்கிறார் விஷ்ணுவர்தன். இன்னொரு முக்கியமான விஷயம் யட்சனை வேறு எந்த மொழிகளிலும் வெளியிட போவதில்லையாம். காரணம் படத்தை தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்து வெளியிட உள்ளோராம் விஷ்ணுவர்த்தன்.
Comments are closed.