உண்மையாக அழுததால் ‘பருத்திவீரன்’ சுஜாதாவை தேடிவந்த வாய்ப்பு..!

226

தமிழ் சினிமாவில் ‘பருத்திவீரன்’ சுஜாதாவுக்கென தனி அடையாளம் இருக்கிறது.. தற்போது ஜீவா-நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘திருநாள்’ படத்தில் நடித்துவருகிறார் சுஜாதா. சமீபத்தில் திருநாள் படத்தில் நயன்தாராவுடன் நடிக்கும்போது அழுகிற மாதிரியான காட்சி ஒன்றை படமாக்கும் போது அந்த காட்சியில் நடித்த அனைவரும் கிளிசரின் போட்டு அழுதார்களாம்.

ஆனால் சுஜாதாவோ கிளிசரின் போடாமலே பயங்கரமாக அழுதாராம். அதை பார்த்த மொத்த யூனிட்டும் கைதட்டி பாரட்ட, இதை பார்த்த ஜீவா சுஜாதாவின் நடிப்பை பாராட்டியதோடு நில்லாமல், தனது அடுத்த படமான ‘போக்கிரிராஜா’ படத்தில் தனக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.

Comments are closed.