கோச்சடையான் ஏப்ரலில் ரிலீஸுக்கு தயாராகி விட்டதால்…. ரஜினியின் அடுத்த இயக்கப்போவது யார் என்பதுதானே அடுத்த கேள்வியாக இருக்கும்? ஷங்கரும், கே.வி.ஆனந்த்தும் ரஜினியிடம் ஆளுக்கொரு கதை சொல்லி ஓகே வாங்கி இருப்பதாகவும் காற்றுவாக்கில் ஒரு செய்தி அடிபடுகிறது.
ஆனால் பலரும் கைகாட்டுவது கே.எஸ்.ரவிகுமாரை நோக்கித்தான். ‘ராணா’ பூஜை வரை வந்து நின்றுவிட்டதால் அவருக்குத்தான் வாய்ப்பு அதிகம் என்கின்றனர். கே.எஸ்.ரவிகுமாரோ “இதுபோன்ற செய்திகளைக் கேட்டு கேட்டு சலித்துவிட்டது. நான் அடுத்ததாக ‘நான் ஈ’ சுதீப்பை வைத்து எனது அடுத்த படத்தை இயக்குகிறேன். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும். அதைப்பார்த்த பிறகாவது இந்தக்கேள்வி கேட்பது குறைகிறதா என பார்ப்போம்” என்கிறார்.