பூபதிபாண்டியன் உதவி இயக்குனர் படத்தில் பரத்!

100

சசி டைரக்‌ஷனில் பரத் நடித்த ‘555’ படம் வெற்றிகரமாக ஐம்பது நாட்கள் ஓடியது. அதனால் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார் பரத். தற்போது ‘ஜாக்பாட்’ என்ற இந்திப்படத்தில் நடித்துவரும் பரத் மலையாளத்தில் யுடிவி தயாரிக்கும் ‘கூத்தரா’ என்ற படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து தமிழில் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார் பரத்.

ஏ.ஆர்.முருகதாஸிடம் கஜினி, ஏழாம் அறிவு ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஆர்.செந்தில்குமார் என்பவர் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் பரத். இந்தப்படத்தில் சத்யராஜும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அடுத்ததாக பூபதி பாண்டியனிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த ரவிச்சந்திரன் என்பவர் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார் பரத். முழுநீள நகைச்சுவை படமாக உருவாகும் இதில் அவருக்கு ஜோடியாக ‘அட்டகத்தி’ நந்திதா நடிக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.