தம்பியின் இசையைக்கேட்டு பாராட்டிய சிம்பு

107

சிம்பு, இப்போது கூட்டணி அமைத்திருப்பது ‘பசங்க’ இயக்குனர் பாண்டிராஜூடன். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இரவும் பகலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காரணம் இயக்குனர் பாண்டிராஜின் வேகம் அப்படி. இந்தப்படத்தில் சிம்புவின் நண்பனாக சந்தானத்துடன் சேர்ந்து சூரியும் நடிக்கிறார்.

இந்தப்படத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். சமீபத்தில் இந்தப்படத்திற்கான முதல் பாடல் கம்போஸிங் நடந்தது. குறளரசன் இசையை லயித்துக்கேட்ட சிம்புவும் பாண்டிராஜும் ‘நீ நல்லா வருவடா’ என ட்விட்டரில் பாராட்டு மழை பொழிந்துள்ளார்கள். இந்தப்படத்தை சிம்புவே தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.