சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் தன்னால் இந்த சமுதாயத்திற்கு பலனளிக்கும் வகையில் ஏதாவது நல்ல விஷயங்களை செய்து வருபவர் நமது ‘சின்னக்கலைவாணர்’ விவேக். இரண்டாவது பசுமைப் புரட்சி தமிழகத்திலிருந்து தொடங்க வேண்டும் என்று விரும்பிய விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை சந்தித்து பேசியபோது, மரக்கன்றுகள் நடும் அவசியத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லுமாறு விவேக்கிடம் வேண்டுகோள் விடுத்தார் கலாம்.
அந்த வகையில் அவர் ஆரம்பித்து வெற்றிகரமாக செயலாற்றிக்கொண்டு இருக்கும் திட்டம்தான் பசுமை கலாம் திட்டம். இத்திட்டத்தின் மூலம் ஒருகோடி மரக்கன்றுகளை தமிழகம் முழுதும் நட தீர்மானித்த விவேக் பல இடங்களில் அதை வெற்றிகரமாக செயல்படுத்தி இதுவரை பல லட்சம் மரக்கன்றுகளையும் நட்டிருக்கிறார். இதன் அடுத்தகட்டமாக விரைவில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் கிராமத்தில் 70ஆயிரம் மரக்க்ன்றுகளை நட இருக்கிறார் விவேக். தொடரட்டும் விவேக்கின் இயற்கையை காக்கும் மக்கள் பணி.