‘விஸ்வரூபம்-2’வுடன் ஒப்பிட்டால் ‘விஸ்வரூபம்’ ஒரு சின்ன குழந்தை – பிரமிப்பை ஏற்படுத்தும் ட்ரெய்லர்

46

இந்த வருட ஆரம்பத்தில் வெளியான விஸ்வரூபம் படத்தின் வெற்றியும், அந்தப்படம் இந்திய அளவில் ஏற்படுத்திய தாக்கமும் மிகப்பெரிது. அதனால்தான் சூட்டோடு சூடாக விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து முடித்துவிட்டார் கமல். இந்தப்படத்திற்கு முதல் பாகத்தைவிட எதிர்பார்ப்பு இருமடங்காக இருக்கிறது.

விஸ்வரூபம்-2வின் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணியை மேற்கொண்டுவரும் நபர் ஒருவர் சமீபத்தில் இதன் ட்ரெய்லரை பார்த்து மிரண்டு போய்விட்டாராம். இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது இந்த இரண்டாம் பாகத்தின் முன்னால் முதல் பாகம் சின்னக்குழந்தை மாதிரிதான் தெரிகிறது என்று தன் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார் அவர். அந்த அளவுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறாராம் கமல்.

மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இந்த ட்ரெய்லரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பார்த்த அவரும் ஆடிப்போய்விட்டாராம். “கமல் ஒருவரால் மட்டுமே இந்த மாதிரி படங்களை எடுக்கமுடியும்.. அதனால்தான் அவர் உலகநாயகன்” என்று ட்ரெய்லர் தந்த பிரமிப்பு மாறாமல் தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார் உதயநிதி. ஆஹா.. எல்லோரும் சேர்ந்து இப்பவே எதிர்பார்ப்பை எகிற வைக்கிறார்களே..!

Leave A Reply

Your email address will not be published.