ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸுடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து தயாரித்துள்ள ‘ராஜாராணி’, திரைப்படம் இந்த 25 நாட்களில் சுமார் 50கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஷங்கரின் சிஷ்யரான அட்லீயின் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்துள்ள இந்தப்படம், ஆர்யா நடித்து இதுவரை வந்த படங்களில் பெரிய படம் என்ற பெயரை தட்டிச்சென்றுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் இந்த படத்தின் சாதனை பிரமிப்பு ஊட்டுகிறது. மலேசியாவில் ‘ராஜா ராணி’யின் வசூல் சாதனை பிரம்மாண்டமாய் இருப்பதாக விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் ‘ராஜா ராணி’ படமாக்கப்பட்ட நேர்த்தியும், குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் வகையில் படமாக்க பட்ட விதமும் தான்.
ஊடங்கங்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் பேராதரவு பெற்றுள்ளது. இந்தப்படத்தை பொதுமக்களிடையே கொண்டுசெல்ல பல்வேறு யுத்திகளை கையாண்ட விதத்துக்காக இந்தப்படத்தின் விளம்பர குழுவுக்கும் ஏகோபித்த பாராட்டு கிடைத்துள்ளது. சில தினங்களுக்கு முன் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்துப் பெற்ற இந்தப்படத்தின் இயக்குனர் அட்லீ, இந்தப்படத்தின் வெற்றியை கமலுக்கு சமர்ப்பிப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப்படம் நாளை(அக்-24) மும்பையில் நடைபெற இருக்கும் 15வது மும்பை திரைப்பட விழாவிலும் திரையிடப்பட இருக்கிறது.