நவ-22க்கு தள்ளிப்போகிறது ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’

81

‘ட்ரீம் தியேட்டர்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சேரன், அதன் மூலமாக தற்போது ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்து, இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு சேரன் இயக்கத்தில் வெளிவருகிறது இந்தப்படம்.

படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் கடந்த செப்-15ல் தான் இந்தப்படத்தின் பாடல்களை வெளியிட்டார் சேரன். புதிதாக ட்ரீம் சவுண்ட்ஸ் என்ற ஆடியோ நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்துள்ள சேரன், இந்த நிறுவனம் மூலம் முதலில் வெளியிட்டிருப்பது இந்தப்படத்தின் பாடல்களைத்தான். வரும் நவம்பர் 15ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்திருந்தார் சேரன். ஆனால் தற்போது சில காரணங்களால் ஒருவாரம் கழித்து அதாவது நவ-22ஆம் தேதி படத்தை வெளியிடுகிறார் சேரன்.

இந்தப்படத்தில் சர்வானந்த், சினேகா, நித்யா மேனன், சந்தானம், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் தயாராகிவரும் இந்தப்படத்திற்கு தெலுங்கில் ‘ஏமிட்டோ ஏ மாயா’ என்று பெயர் வைத்திருக்கிறார் சேரன். தீபாவளிக்கு அஜீத், கார்த்தி, விஷால் நடித்த படங்கள் வெளியவதாலும், தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் என்பதாலும் தனது படத்தின் ரிலீஸ் தேதியை நவ-22க்கு மாற்றி வைத்துவிட்டார் சேரன்.

1 Comment
  1. ubcwrajwvy says

    Muchas gracias. ?Como puedo iniciar sesion?

Leave A Reply

Your email address will not be published.