‘எத்தன்’ படத்தில் ஆரம்பித்து கடந்த ஐந்து வருடங்களாக சில படங்களை வாங்கி தனியாகவும் சில படங்களை ஏரியா வாரியாகவும் விநியோகம் செய்துவந்தார் அபி&அபி பிக்சர்ஸ் அபினேஷ். அதுமட்டுமல்ல சி.வி.குமாரின் நெருக்கமான நண்பராக மாறிய அபினேஷ், அவருடன் சேர்ந்து படங்களை தயாரித்தும் இணைந்து விநியோகித்தும் வந்தார். கூடவே ஆறு நிறுவனங்கள் கூட்டணி சேர்ந்து உருவாக்கிய ‘ட்ரீம் பேக்டரி’யில் அபினேஷின் நிறுவனமும் ஒன்று.
ஆனால் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள ‘நேற்று இன்று நாளை’ படத்தை சோலோவாக வாங்கி வெளியிடுகிறது அபி&அபி நிறுவனம். படத்தை பார்த்த அபினேஷுக்கு படம் ரொம்பவே பிடித்துப் போனது தான் இதற்கு காரணம். தவிர அபி&அபி தனது நட்பு கம்பெனி என்பதால் ஸ்டுடியோகிரீனும் பெருந்தன்மையுடன் பட வெளியீட்டை விட்டுக்கொடுத்துள்ளது.
Comments are closed.