விஷால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாராம். என்ன ஆச்சு விஷாலுக்கு என திரையுலகில் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒருபக்கம் பாண்டியநாடு படத்திற்காக பத்துநாட்களாக இரவு பகல் பாராமல் இடைவிடாத படப்பிடிப்பு. இன்னொரு பக்கம் மதகஜ ராஜா படத்திற்காக மீடியாக்களில் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது என கடுமையான மன அழுத்தத்தால் விஷாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டது உண்மைதான். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரை சில நாட்கள் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்று சொல்ல இப்போது ஓய்வுக்குப் பிறகு பழைய விஷாலாக மாறிவிட்டார் விஷால். சமீபத்தில் அவரை சந்தித்து நலம் விசாரித்த குஷ்பூ, தற்போது விஷால் உடல்நலம் தேறிவிட்டதாக தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.