பெண் குழந்தையை தத்து எடுத்தார் சரண்யா

75

குடும்ப உறவுகளை, அவற்றில் நடக்கும் பாசப்போராட்டங்களை மையப்படுத்தி படங்கள் வெளிவருவது அரிதாகவே இருக்கிறது. காரணம் இந்த கமர்ஷியல் சினிமா உலகில் குடும்பப்பாங்கான படங்களுக்கு சரியான வரவேற்பு கிடைக்குமா என்ற சந்தேகம்தான். ஆனால் இந்த சந்தேகங்களை எல்லாம் தூக்கி தூரப்போட்டுவிட்டு ‘அம்மா அம்மம்மா’ என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் பாலு மணிவண்ணன். இவர் மோகமுள், பாரதி, பெரியார் போன்ற படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியவர்.

இந்த படத்தில் முன்னணி நட்சத்திர பட்டாளம் என்று எதுவும் இல்லை. ஆனால் நடிப்பில் போட்டிபோடும் சம்பத், சரண்யா, ஆனந்த், சுஜிதா, தேவதர்ஷினி, டி.பி கஜேந்திரன் என பலர் நடிக்கிறார்கள். திருமணமாகி 15ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் இல்லாத சரண்யா, சம்பத் தம்பதியினர், ஆனந்த் – தேவதர்ஷினியின் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறர்கள். ஆனால் அந்தக்குழந்தையை இறந்துபோன தனது அம்மாவாக நினைக்கும் அவளது அண்ணனான பத்துவயது சிறுவன், மீண்டும் அந்தக்குழந்தையை தங்கள் வீட்டுக்கே அழைத்து வரும்படி பாசப்போராட்டம் நடத்துகிறான். முடிவில் சரண்யா, சம்பத் தம்பதியிடம் இருந்து குழந்தையை திரும்ப பெற்றார்களா என்பதை செண்டிமென்ட்டுடன் சொல்கிறோம் என்கிறார் இயக்குனர் பாலுமணிவண்ணன்

Leave A Reply

Your email address will not be published.