பாலிவுட்டில் ராம்சரண் புதிய சாதனை

31

ஜஞ்சீர் இந்திப்படத்தில் நடிப்பதன் மூலம் பாலிவுட்டில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் ராம்சரண். 1970ல் அமிதாப் பச்சன் நடித்து வெளியான ஜஞ்சீர் படத்தின் ரீமேக்தான் இந்தப்படம். அமிதாப் நடித்த ரோலில்தான் ராம்சரண் நடிக்கிறார். இது தெலுங்கில் தூஃபான் என்ற பெயரில் தயாராகியுள்ளது. ராம்சரணுக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ள இந்தப்படம் நாளை(செப்-6) தெலுங்கிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் ரிலீஸகிறது.

இந்தப்படத்தின் சம்பள விஷயத்தில் கூட ஒரு சாதனையை செய்துள்ளார் ராம்சரண். என்னதான் தங்களது மொழிகளில் ஸ்டார் அந்தஸ்தில் இருந்தாலும் பல முன்னணி நடிகர்கள் பாலிவுட் படங்களில் முதன்முதலாக அடியெடுத்து வைக்கும்போது அவர்களை ஒரு புதுமுகமாகத்தான் அங்கே எல்லோரும் பார்ப்பார்கள். அதேபோல அவர்களுக்கான சம்பளமும் கூட அவர்களை புதுமுகமாக கருத்தில் கொண்டுதான் வழங்கப்படும்.

ராமையா வஸ்தாவையா படத்தில் நடித்த கிரிஷ் குமாருக்கு 9 கோடியும் ராஞ்சனா படத்தில் நடித்த தனுஷுக்கு 7 கோடியும் தான் சம்பளமாக தரப்பட்டது. ஆனால் தனது முதல் இந்திப்படத்திலேயே 12கோடி ரூபாய் ஊதியமாக பெற்றிருக்கிறார் ராம்சரண். இதன்மூலம் இந்தியில் அறிமுகமாகும் மற்ற மொழி நடிகர்களிலேயே அதிக சம்பளம் வாங்கிய பெருமையை தட்டிச்சென்றுள்ளார் ராம்சரண்.

Leave A Reply

Your email address will not be published.