எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய நான் ஈ படத்தில் வில்லனாக நடித்த சுதீப்புக்கு கிடைத்த அட்டகாசமான வரவேற்பு நாடறிந்த விஷயம். சுதீப் இப்போது கன்னடத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். ராஜமௌலி தெலுங்கில் பாஹூபாலி என்ற சரித்திரப்படத்தை இயக்குவதில் மும்முரமாக இருக்கிறார்.
விஷயம் என்னவென்றால் பாஹுபாலி படத்தில் கொஞ்சநேரமே வந்துபோகும், ஆனால் ஒரு பவர்ஃபுல்லான கேரக்டர் ஒன்றுக்கு யாரை அழைக்கலாம் என யோசித்த ராஜமௌலிக்கு பளிச்சென்று மின்னல்போல சுதீப்பின் முகம் கண்முன் வந்துபோயிருக்கிறது.
உடனே சுதீப்பை அழைத்து விஷயத்தைச் சொல்ல எந்த மறுப்பும் சொல்லாமல் சந்தோஷமாக, நடிக்க ஒத்துக்கொண்டாராம் சுதீப். ‘ரிபெல் ஸ்டார்’ பிரபாஸ், அனுஷ்கா ஜோடியாக நடிக்கும் இந்தப்படத்தில் ராணா டகுபதி வில்லனாக நடிக்கிறார். இன்னொரு முக்கியமான ராஜமாதா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜும் ஒரு பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.