பாகிஸ்தான் பார்டர் செல்கிறார் விக்ரம் பிரபு

40

கும்கி படத்தின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்த விக்ரம் பிரபு, தனது முதல்படத்திலேயே, திரையுலகின் டாப் ஹீரோக்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டார். தற்போது ஒரே சமயத்தில் ‘இவன் வேற மாதிரி’, ‘சிகரம் தொடு’, ‘அரிமா நம்பி’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு.

ஆக்ஷன் ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்தில் ராணுவ அதிகரியாக நடிக்கிறார் விக்ரம் பிரபு. இந்தப்படத்தில் ராணுவ அதிகாரியின் காதலைப்பற்றி சொல்கிறாராம் குமரவேலன். இந்தப்படத்தின் படப்பிடிப்பை வட இந்தியாவில் அதுவும் குறிப்பாக ஹிமாச்சல பிரதேசத்திலும் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் எல்லைகளிலும் படமாக்க இருக்கிறார் குமரவேலன்.

இதற்கான அனுமதியை படத்தின் தயாரிப்பாளர் செயின்ராஜ் ஜெயின் தனது செல்வாக்கை பயன்படுத்தி வாங்கித் தந்திருக்கிறார். வீரப்பன் என்கவுண்டர் புகழ் விஜயகுமாரையும் இன்னும் சில அதிகாரிகளையும் சந்தித்து இந்தப்படத்தின் சில காட்சிகளைப்பற்றி விவாதிக்க இன்னும் சில நாட்களில் டில்லி செல்ல இருக்கிறார் குமரவேலன்.

Leave A Reply

Your email address will not be published.