தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்பே வெளியான ஆரம்பம் படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் பலத்த வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அஜீத் வரும் காட்சிகளில் எல்லாம் கைதட்டலும் விசிலும் பறக்கிறது. இங்கு மட்டுமல்ல.. வெளிநாட்டிலும் படத்திற்கு இதே வரவேற்புதான்.
வசூலும் அதேபோல அதிரடியாகத்தான் இருக்கிறது. படம் வெளியான மூன்று தினங்களுக்குள், அதாவது சனிக்கிழமை வரை இங்கிலாந்தில் 1.03 கோடி ரூபாயும் ஆஸ்திரேலியாவில் 25 லட்சமும் வசூலித்துள்ளது. இனிவரும் நாட்களில் இது இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.