கமலுடன் நடிக்க ஏங்கும் கன்னட சூப்பர்ஸ்டார்

67

கமலுடன் சில படங்களில் நடித்ததோடு இன்னும்கூட அந்த நட்பை தொடர்ந்து கொண்டிருப்பவர் கன்னட நடிகர் ரமேஷ் அரவிந்த். கன்னடத்தை பொறுத்தவரை இவர் ஒரு சிறிய நடிகர்தான். ஆனால் கமலுடன் நடிக்க கன்னட சூப்பர்ஸ்டார் ஒருவரே ஆர்வமாக இருப்பதோடு அந்த நாளுக்காக ஏங்கிக்கொண்டும் இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல.. கமலின் அதிதீவிர ரசிகரான கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் தான்.

“கமலுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் கனவு. ஆனால் அது இன்னும் நிறைவேறாமலேயே இருக்கிறது. ஒருமுறை கமலை சந்தித்தபோது அவர் என்னை கட்டித்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார். அன்றைய தினத்தில் இருந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு நான் குளிக்கவே இல்லை.. காரணம் அந்த இனிய அனுபவம் உடனே என்னைவிட்டு போய்விடக்கூடாதே என்பதற்காகத்தான்” என்று கமலைப்பற்றிய கனவில் மிதந்தபடி சிலாகித்து பேசுகிறார் சிவராஜ்குமார்.

Leave A Reply

Your email address will not be published.