பிரபலங்கள் எல்லாம் இப்போது சமூக வலைதளங்களான ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் கணக்கை துவங்கி அதில் தங்களைப் பற்றிய தகவல்களை அவ்வப்போது அப்டேட் செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக சினிமா பிரபலங்கள் தாங்கள் நடித்துவரும் படங்களைப்பற்றிய தகவல்களை சுடச்சுட பரிமாறிக்கொள்கின்றனர்.
இதுவரை இயக்குனர் ஷங்கர் தனது படங்களைப் பற்றிய தகவல்களை ரசிகர்கள் அறிந்து கொள்ளும் விதமாக ஏற்கனவே வெப்சைட் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார். இப்போது புதிதாக ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் தனது கணக்கை துவங்கியுள்ளார் ஷங்கர். அவரை பின்தொடர விரும்புவர்கள் @shankarshanmugh என ட்விட்டரிலும் shankarofficial என ஃபேஸ்புக்கிலும் தொடர்புகொள்ளலாம்.