அள்ளித்தந்த வானம்’ படத்தில் பிரபுதேவாவுடன் சேர்ந்து சூப்பர் டான்ஸ் ஆடிய குழந்தை நட்சத்திரமான கல்யாணி (பூர்ணிதா) திருமணம் செய்துகொள்ளப் போகிறார். சின்ன வயதிலேயே ஹீரோயினாக அறிமுகமான கல்யாணி பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.
தற்போது சீரியல்களில் மும்முரமாக நடித்துவரும் கல்யாணியின் திருமண நிச்சயதார்த்தம் ஐந்து மாதங்களுக்கு முன்னரே நடந்து முடிந்து விட்டது. மும்பையைச் சேர்ந்த டாக்டர் ரோஹித் என்பவர்தான் மாப்பிள்ளை. வரும் டிசம்பர் 12ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.
“இந்த ஐந்து மாதங்களில் எனக்கு கணவராக வரப்போகிறவரைப் பற்றி நன்றாக புரிந்துகொண்டேன். இது பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் என்றாலும் கிட்டத்தட்ட லவ் மேரேஜ் மாதிரிதான் இப்போது எனக்கு தோன்றுகிறது. திருமணம் முடிந்தபின் மீண்டும் நடிக்க வந்துவிடுவேன்” என்கிறார் கல்யாணி.