பிருத்விராஜூட்ன் ஜோடி சேர்ந்தார் ‘பூ’ பார்வதி

80

அம்பிகாபதி-அமராவதி, லைலா-மஜ்னு என அமரத்துவம் வாய்ந்த காதலை படமாக்கும்போது அதற்கு தனி முக்கியத்துவம் கிடைத்துவிடுகிறது. அந்த வகையில் தற்போது மலையாளத்தில் ஒரு படம் உருவாக இருக்கிறது. 1960களில் கேரளாவின் கோழிக்கோட்டில் புகழ்பெற்ற மொய்தீன் – காஞ்சனமாலா ஜோடியின் காதலை பற்றிய படம்தான் இது.

இந்தப்படத்தை அறிமுக இயக்குனரான விமல் என்பவர் இயக்குகிறார். இதில் மொய்தீன் கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஞ்சனமாலா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ‘பூ’, ‘மரியான்’ படங்களில் நடித்த நம்ம பார்வதி. இந்தப்படத்தின் படப்பிடிப்பை காஞ்சனமாலா வாழ்ந்த பகுதியான கோழிக்கோடு பகுதிகளில் நடத்த இருக்கிறாராம் விமல்.

ஏற்கனவே 2007ல் இந்தக்கதையை குறும்படமாக இயக்கியிருந்தார் விமல். இந்தப்படம் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றது. அதனால் இதை திரைப்படமாக எடுத்தால் என்ன என்ற ஐடியாவுடன் பிருத்விராஜை அணுகிய விமல், தான் எடுத்த குறும்படத்தை போட்டுக்காட்ட அதைப்பார்த்து இம்ப்ரெஸ் ஆன பிருத்விராஜ் உடனே இந்தப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டாராம்.

Leave A Reply

Your email address will not be published.