விக்ரமை வைத்து தற்போது விஜய் மில்டன் இயக்கிவரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இது ரோடு மூவி எனப்படும் பயணக்கதை என்பதால், பலவிதமான லொக்கேஷன்களில் படப்படிப்பு நடத்தி வருகிறார்கள். தற்போது நேபாளில் முகாமிட்டுள்ள படப்பிடிப்பு குழுவினர் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி உட்பட சில முக்கியமான காட்சிகளை இங்கேதான் படமாக்க இருக்கிறார்கள்.
இந்தப்படத்தில் சமந்தா இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று ஏற்கனவே சொல்லியிருந்தோம் அல்லவா. அதில் ஒரு சமந்தா, நேபாளி பெண்ணாக நடிக்கிறார். அது சம்பந்தப்பட்ட காட்சிகளைத்தான் இப்போது படமாக்கி வருகிறார்களாம். ஏப்ரல்-15 வரை இங்கே படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரிகிறது.
Comments are closed.