ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த நான்கு நாட்களாக வில்லனை விஜய் துரத்தும் காட்சிகளை இரவு பத்து மணியில் இருந்து அதிகாலை நான்கு மணி வரை படமாக்கி இருக்கிறார் முருகதாஸ்.
விஜய்க்கு வில்லனாக நடிப்பவர் பெங்காலி நடிகரான டோடா ராய் சௌத்ரி என்பவர்தான். இந்தப்படத்திற்கு பெங்காலியில் சரளமாக பேசத்தெரிந்த நடிகர் வேண்டும் என முருகதாஸ் தேடியபோது கிடைத்தவர்தான் இந்த டோடா ராய்.
கதைப்படி டோடா ராய் ஒரு இண்டர்நேஷனல் தாதா. அவரை இந்தியாவுக்கு தந்திரமாக வரவைத்து பிடிக்க லோக்கல் கிரிமினலான விஜய்யின் உதவியை போலீஸார் நாடுகிறார்கள். அப்படி திட்டமிட்டு வில்லனை கொல்கத்த வரவைத்த விஜய், அவரை சேஸ் செய்து பிடிக்கும் காட்சிகளைத்தான் தற்போது படமாக்கிவருகிறார்களாம்.
இன்னும் சில தினங்களில் இங்கே படப்பிடிப்பை முடித்த கையோடு தொடர்ந்து வில்லன் டோடா ராய் ஜெயிலில் இருந்து தப்பிக்கும் காட்சிகளை எடுப்பதற்காக வரும் பிப்-21ல் ராஜமுந்திரிக்கு கிளம்புகிறார்கள் படக்குழுவினர். இன்னும் பெயர் ஏதும் வைக்கப்படாத இந்தப்படம் தற்போதைக்கு விஜய்யின் 57வது படம் என்றே சொல்லப்பட்டு வருகிறது.