மூன்றுமுகத்துடன் தாறுமாறாக டைட்டிலை ‘தெறி’க்கவிட்ட விஜய்..!

184

theri 1
இளைஞர்களை உற்சாக கூக்குரலால் கத்தவைக்கும் வார்த்தை ‘தெறி’.. வெறும் இரண்டே எழுத்து… ஆம் இதுதான் இப்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 59வது பட டைட்டிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.. மூன்றுமுகம், காக்கி, தாறுமாறு என என்னென்னவோ டைட்டில்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக ‘தெறி’க்க விட்டிருக்கிறார்கள்.

எதற்காக மூன்று முகம் டைட்டிலுக்காக விஜய் டீம் முட்டி மோதியது என்பதை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே பறைசாற்றிவிடுகிறது. துப்பாக்கிக்கு பின் மீண்டும் விஜய் பார்முக்கு வந்துள்ளது கண்கூடாக தெரிகிறது.. நிச்சயமாக விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் அசரவைக்கும் ஒரு மாஸ் என்டர்டெய்னர் ஆக இந்தப்படம் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Comments are closed.