
வருடத்தில் அதிக படங்கள் நடித்து தள்ளுபவர் என்கிற பெயர் நடிகர் விமலுக்குத்தான் சொந்தமாக இருந்தது. தற்போது அவரே வெட்கி தலைகுனியும் அளவுக்கு இருக்கிறது கமல் படங்களை ஒப்புக்கொள்ளும் வேகமும் அவற்றை ரிலீஸ் செய்யு வேகமும்.
கமல்ஹாசன். இந்த வருடம் மட்டும் உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம் மற்றும் சீக்கட்டிராஜ்யம் (தெலுங்கு) என்று நான்கு படங்களை ரிலீஸ் செய்த கமல், ஒரு படம் முடிந்து ரிலீஸாகும்போதே அடுத்த படத்திற்கான அறிவிப்பையும் தந்துவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அந்தவகையில் கமல், அமலா இணைந்து நடிக்கப்போவதாக ஏற்கனவே வெளியான செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக தெலுங்கில் அந்தப்படத்திற்கு ‘அம்மா நானா ஆட்டா’ என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அப்படிஎன்றால் அப்பா அம்மா விளையாட்டு’ என அர்த்தம். அப்போ தமிழில் இது தான் டைட்டிலா என கேட்காதீர்கள்.. சும்மா நச்சுன்னு ஒரு டைட்டிலை சொல்லப்போறார் பாருங்க.
Comments are closed.