‘ரம்மி’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி முதல் 20 நிமிடங்கள் மட்டுமே வருகிறார் என வதந்திகள் ஒருபக்கம் பரவி வருகின்றன. ஆனால் இது ஒரு பொய்யான செய்தி என மறுத்துள்ளார் படத்தின் இயக்குனர் கே.பாலகிருஷ்ணன். படம் ஆரம்பித்து எட்டாவது நிமிடம் முதல் படத்தின் இறுதி வரை வருகிறாராம் விஜய் சேதுபதி.
அவருக்கு இணையாக இனிகோ மற்றும் பரோட்டா சூரி கதாபத்திரங்கள் வருகிறார்கள். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காகவே மக்கள் மீண்டும் படத்தை பார்க்க வருவார்களாம். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப்படத்தை வரும் 27ஆம் தேதியன்று வெளியிட முடிவு செய்துள்ளார்கள். எஸ்.கே. கார்பரேஷன் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறது.