தலைவர் ஊரை மாற்றியதற்காக வருத்தம் தெரிவித்த விஜய்..!

219

vijay 1
போது மேடைகளில் சினிமா பிரபலம் ஒருவர் பேசுகிறார் என்றால் அது அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்படுவது வாடிக்கை தான். அந்த நேரத்தில் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டியது அவசியம். அப்படித்தான் நேற்று முன் தினம் ‘தெறி’ இசைவெளியீட்டு விழாவில் குட்டிக்கதை ஒன்றை கூறிய விஜய், அதில் சொன்ன தலைவரின் நாட்டை மாற்றிவிட்டார்..

அந்தக்கதையில் சீன தலைவரான மாவோவை ரஷ்ய தலைவர் என குறிப்பிட்டு விட்டார்.. ஆனால் விழா முடிந்தபின் சோஷியல் மீடியாவிலும் இணையதளங்களிலும் நேற்று முழுவதும் இதுதான் வைரலானது. இது விஜய்யின் கவனத்துக்கும் போனது.. “பெரிய மேடைகளில் நாம் சில கருத்துக்களை ரசிகர்களுக்காக சொல்லும் போது இந்த மாதிரியான தவறுகள் நடந்து விடுகின்றன இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன் மற்றபடி நான் சொன்ன கருத்து ரசிகர்களை சென்றடையும் என நம்புகிறேன்” என வருத்தம் தெரிவித்துள்ளார் விஜய்..

Comments are closed.