நலன் குமாரசாமி படத்தில் அரவிந்த்சாமி..!

237

aravind samy sings for uriyadi

மசாலா காபி இசைக்குழு பற்றி கேள்விப்பட்டு இருகிறீர்களா..? இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. இனி அரவிந்த்சாமி புண்ணியத்தில் இவர்களைப்பற்றி நிறைய கேள்விப்படுவீர்கள்.. காரணம் இவர்கள் இசையமைத்துள்ள ‘உறியடி’ படத்தில் அரவிந்த்சாமியும் ஒரு பாடலை பாடியுள்ளாரே.. இந்தப்படத்தின் டீசர் நாளை வெளியாக இருக்கிறது.

இயக்குனர் நலன் குமாரசாமியின் நண்பரான விஜய்குமார் தயாரித்து எழுதி, இயக்கியிருக்கும் படம் தான் இந்த ‘உறியடி’. நலன் குமாரசாமியும் இந்தப்படத்தில் இணைத்தயாரிப்பாளராக இணைந்து தயாரித்துள்ளார். தங்களது நண்பனை தாக்கியவர்களை பழிக்குப் பழி வாங்க முற்படும் நண்பர்கள் பற்றி கதை இது.

இடையில் அவர்களின் அறியாமையை தன் சுய லாபத்திற்காக பயன்படுத்த முயற்சிக்கும் ஒரு அரசியல்வாதியையும் இணைத்த திரைக்கதையில் விறுவிறுப்பான வகையில் இந்தப்படம் உருவாகியிருக்கிறது. விரைவில் படம் திரைக்கு வரவிருக்கிறது இந்தப் படத்தில் விஜய்குமார், மைம் கோபி, சிட்டிசன் சிவக்குமார், சந்துரு, ஜெயகாந்த், சிவபெருமாள், ஹன்னா பெல்லா ஆகியோர் நடித்துள்ளனர்.

Comments are closed.