மலையாளத்தில் சின்னச்சின்ன ரோலில் நடித்துக் கொண்டிருந்தவர்தான் ஹனிரோஸ். தமிழில் சிங்கம்புலி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க, அந்தப்படமும் அவரது காலை வாரிவிட்டது. அதைத்தொடர்ந்து மீண்டும் மலையாள சினிமாவுக்கே போன அவருக்கு இந்தமுறை ராஜகம்பள வரவேற்பு தான்.
‘த்ரிவேண்ட்ரம் லாட்ஜ்’, ‘ஹோட்டல் கலிஃபோர்னியா’, ‘அஞ்சு சுந்தரிகள்’ என வரிசையாக இவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட் அடிக்க மலையாளத்தில் முக்கியமான நடிகையாகிவிட்டார் ஹனிரோஸ். அதனால் இப்போது வரிசையாக இளைய தலைமுறை இயக்குனர்களின் படங்களால் நிரம்பிக் கிடக்கிறது ஹனிரோஸின் கால்சீட் டைரி.
மலையாளத்தில் இவ்வளவு பிஸியாக இருக்கும் ஹனிரோஸ் நம்ம இளைய தளபதி விஜய்யின் வெறித்தனமான ரசிகை. விஜய் படங்களை முதல் நாளாக தியேட்டரில் போய் பார்த்துவிட்டு வந்து காலரைத் தூக்கிவிட்டுக்கொள்பவர்.
அப்படிப்பட்டவருக்கு விஜய்யுடன் நடிக்க ஆசை இருக்காதா என்ன? விஜய்யுடன் ஒரு படத்திலாவது(ஜோடியாகத்தான்) நடித்துவிட வேண்டும் என்ற தனது ஆசையை தனக்கு நெருங்கிய வட்டாரங்களில் பரப்பி வருகிறார் ஹனிரோஸ்.