திலீப்பிற்கு வெற்றி தருவாரா ‘தென்காசி பட்டணம்’ டைரக்டர்..?

107

தமிழில் வெளியான ‘தென்காசி பட்டணம்’ படத்தை பார்த்திருப்பீர்கள். படம் முழுவது நான்ஸ்டாப் காமெடிக்கு உத்தரவாதம் தந்து தனது நகைச்சுவையான திரைக்கதையால் ரசிகர்களை விலாநோக சிரிக்க வைத்திருப்பார் இயக்குனர் ரஃபி மெக்கார்டின்.

இதில் விவேக் நடித்த கேரக்டரை மலையாளத்தில் இதன் ஒரிஜினலான ‘தென்காசி பட்டணம்’ படத்தில் திலீப் செய்திருந்தார். இந்தப்படத்தையும் சேர்த்து இதுவரை திலீப் நடித்துள்ள நான்கு படங்களை இயக்கியுள்ள ரஃபி அவரை வைத்து ஐந்தாவதாக இயக்கியுள்ள படம் தான் ‘ரிங் மாஸ்டர்’.

இந்தப்படத்தில் நாய்களுக்கு பயிற்சி கொடுப்பவராக நடிக்கிறார் திலீப். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஹனிரோஸ். திலீப்பின் செண்டிமெண்ட்டுக்கு ஏற்ற நாளான சித்திரை விஷு தினத்தன்று இந்தப்படத்தை ரிலீஸ் செய்கின்றனர். ரஃபி-திலீப் ராசி ஐந்தாவது முறையும் ஒர்க் அவுட் ஆகும் என்றே தெரிகிறது.

Comments are closed.