இதோ ‘கும்கி’ வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால் ‘கும்கி’யை இயக்கிய பிரபு சாலமன் இப்போதுதான் அவரது ‘கயல்’படத்திற்கான விஷுவல் எஃபெக்ட்ஸ்’ பணிகளில் மும்முரமாக இருக்கிறார். பிரபுசாலமன் எப்போதுமே அப்படித்தான். அவசரமே காட்டமாட்டார்.
‘மைனா’, ‘கும்கி’ என தொடர்ச்சியாக இரண்டு ‘ஹிட்’டுகளை கொடுத்தவருக்கு அடுத்து ‘ஹாட்ரிக்’ வெற்றியை சுவைக்கவேண்டுமானால் இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொள்வது அவசியம் தான். கும்கி படத்தின் க்ளைமாக்ஸில் யானைகள் மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சியை கிராஃபிக்ஸிம் பிரமாண்டமாக காட்ட முயற்சித்திருந்தார். ஆனாலும் அது ரொம்பவே செயற்கைத்தனமாக இருந்ததால் படத்தின் மைனஸ் பாய்ண்ட்டாகத்தான் பேசப்பட்டது.
தற்போது ‘கயல்’ படத்திலும் க்ளைமாக்ஸில் கிராஃபிக்ஸிகு நிறைய வேலைகள் இருக்கிறது. அதனால் இந்தமுறை நிறைய கவனம் எடுத்து, அந்த காட்சிகளின் கிராஃபிக்ஸில் கவனம் செலுத்தி வருகிறார். நிச்சயமாக பிரபுசாலமனின் இந்த தொழில் நேர்த்தி அவருக்கு ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுத்தரும் என்பதில் சந்தேகம் இல்ல.
இந்தப்படத்திற்காக கடந்த செப்டம்பரில்தான் பொன்னேரிக்கு அருகில் மிகப்பெரிய செட் ஒன்றை நிர்மாணித்து க்ளைமாக்ஸ் காட்சியை பிரபுசாலமன் படமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.