இப்படியெல்லாம் நடப்பது உண்மையிலேயே ஆரோக்கியமான செயல் தான். வளர்ந்த கலைஞர்கள் எப்படி பக்குவமாக நட்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இது ஒரு முன் மாதிரியும் கூட… என்ன நடந்தது என்று தெரிந்தால் நீங்களும் ஆச்சர்யப்பட்டுத்தான் போவீர்கள்.
சமீபத்தில் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இளையதளபதி விஜய்யுடன் தான் ஜாலியாக ஆடிப்பாடி பொழுது போக்குவதாகவும் கூடவே ‘ஐ லவ் யூ ப்ரோ’ என்றும் ஒரு ஸ்டேட்டஸை தட்டிவிட ரசிகர்களுக்கோ நம்பமுடியாத இன்ப அதிர்ச்சி. உடனே தனுஷிடம் அப்படியென்றால் விஜய்யை எங்களுக்கு ஒரு ‘ஹாய்’ சொல்லச்சொல்லுங்கள் என்று கோரிக்கை வைத்தனர்.
சில நிமிடங்களில் தன்னுடன் விஜய்யும் இணைந்து நிற்கும் படத்தை வெளியிட்டார் தனுஷ். அதில் தனுஷின் பின்பக்கம் நிற்கும் விஜய் ரசிகர்களுக்கு ஹாய் சொல்வது மாதிரி இருந்தது. அதன் கீழே, “உங்களைப்போல பல ரசிகர்கள் கேட்டதற்கு இணங்க இளையதளபதி இப்போது உங்களுக்கு லைவ் ஆக ஹாய் சொல்கிறார் என ஸ்டேட்டஸும் போட்டிருந்தார் தனுஷ். விஜய், தனுஷின் இந்த கலகல நட்பு இருவரது ரசிகர்களிடமும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.