தொடர்கிறது ‘டபுள் ஜாக்பாட்’ சென்டிமெண்ட் – நஸ்ரியாவின் புது சாதனை

98

நிச்சயமாக நஸ்ரியாவைத்தவிர வேறு யாருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை நஸ்ரியாவின் ராசி அப்படியோ என்னவோ..! புதிர்போடாமல் விஷயத்துக்கு வருகிறோம். நஸ்ரியா ‘ராஜா ராணி’யில் ஜெய்யுடன் நடித்தார். அவருடன் மீண்டும் நடித்த ‘திருமணம் எனும் நிக்காஹ்’ இப்போது ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.

நிவின் பாலியுடன் ‘நேரம்’ படத்தில் நடித்தார். அடுத்து அவருடன் ‘ஓம் சாந்தி ஒசானா’ என்ற படத்திலும் நடித்துவருகிறார். துல்கர் சல்மானுடன் ‘சலாலா மொபைல்ஸ்’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும்போதே மீண்டும் அவருடன் தமிழ், மலையாளம் என இருமொழிகளில் ‘வாய்மூடி பேசவும்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது.

அதேபோல மலையாள இளம் முன்னணி நடிகர் ஃபகத் ஃபாசிலுக்கு ஜோடியாக அஞ்சலி மேனன் இயக்கிவரும் படத்தில் ஜோடியாக நடித்துவரும் நஸ்ரியாவை மீண்டும் விடாது துரத்துகிறது அவரது டபுள் ஜாக்பாட் செண்டிமெண்ட் ஆம். களிமண்ணு படத்தின் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய பிளஸ்ஸி அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில் ஃபகத் ஃபாஸில்தான் ஹீரோ நஸ்ரியாதான் நாயகி.

ஹீரோயினாக அறிமுகமான ஒரே வருடத்தில், தான் நடித்த படங்களின் ஹீரோக்களுடன்(தனுஷை தவிர) உடனுக்குடன் மீண்டும் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு நஸ்ரியாவுக்கு மட்டும் கிடைத்திருப்பது இதுவரை வேறு எந்த நடிகையும் செய்திராத சாதனை.

Leave A Reply

Your email address will not be published.