
ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயரால் போலியானவர்கள் உலாவருவது வாடிக்கையாகிவிட்டது. இதை தடுப்பதும் கடினமான விஷயமாகவே இருக்கிறது. இப்போது நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸின் பெயரில் போலி அக்கவுண்ட் தொடங்கியுள்ள சில விஷமிகள், அவரது புதிய படத்தில் நஸ்ரியா கதநாயகியாக நடிக்க இருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தத லாரன்ஸ், தனது பெயரில் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் எதுவும் கிடையாது. எனவே அது மாதிரி எந்த செய்தி வந்தாலும் நம்பாதீர்கள் என கூறியுள்ளார். “அடுத்து எனது படத்தில் நஸ்ரியா கதாநாயகியாக நடிக்கிறார் என்று நானே ட்விட் செய்த மாதிரி நேற்று சோஷியல் மீடியாவில் செய்தி பரப்பப்பட்டது. எனது பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு துவக்கப்பட்டு பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார்கள். நான் பேஸ்புக், ட்விட்டர் எதையும் உபயோகப்படுத்த வில்லை. மேற்கொண்டு இது மாதிரி தொடருமானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ராகவா லாரன்ஸ் எச்சரித்துள்ளார்.
Comments are closed.