‘நான்’ படத்தில் தனக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது தான் நடித்துவரும் ‘சலீம்’ படத்தில் முழுக்கவனத்தையும் செலுத்தி நடித்துவருகிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.
இதுவரை படத்தைப்பற்றிய தகவல்கள் எதையும் வெளியே கசியவிடாமல் பாதுகாத்து வந்த விஜய் ஆண்டனி, தற்போது சலீம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை நாளை(நவ-22) இரவு 7 மணிக்கு யூ-டியூப் இணையதளத்தில் வெளியிடுகிறார்.
இந்தப்படத்தில் சலீம் என்ற டாக்டராக விஜய் ஆண்டனி நடிக்கிறார். நிர்மல்குமார் இயக்கும் இந்தப்படத்தில் ஆகாஷ் பரதசானி என்பவர் ஹீரோயினாக நடிக்கிறார்.