ஸ்ருதிஹாசன் வழியில் தங்கை அக்‌ஷரா

80

கமலின் இரண்டாவது மகளான அக்‌ஷரா நடிக்கவரபோகிறார் என கடந்த ஆறு மாதங்களாகவே ஒரு செய்தி பரபரப்பாக அடிபடுக்கொண்டிருந்த்து. அவர் நடிப்பில் ஆர்வம் இன்றி விளம்பரப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார் எனற தகவலும் கிடைத்தது. ஆனால் இதற்கெல்லாம் ட்விஸ்ட் வைத்த மாதிரி தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார் அக்‌ஷரா.

‘ராஞ்சனா’ வெற்றிக்குப் பிறகு தனுஷ் இந்தியில் அமிதாப்புடன் இணைந்து நடிக்கிறார் தனுஷ். பால்கி இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தியில் தனுஷ் நடிக்கும் இரண்டாவது படமே பாலிவுட் சூப்பர்ஸ்டாருடன் என்பது ஒரு சிறப்பு என்றால் கமலின் மகள் அதில் அறிமுகமாவது இன்னொரு சிறப்பு. இவரது அக்கா ஸ்ருத்ஹாசனும் முதலில் இந்தியில் ‘லக்’ என்ற படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் தான் தமிழுக்கு வந்தார். அதே பாணியைத்தான் இப்போதும் தங்கையும் பின்பற்றுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.