சின்னச்சின்ன வேடங்கள் என்றாலும் அதில் தனது நடிப்பால் பளிச் என தெரிபவர் நடிகர் கார்த்திக் குமார். ‘யாரடி நீ மோகினி’ படத்தில் தனுஷின் நண்பராக நடித்த இவரது நடிப்பை நம்மால் மறக்க முடியாது. அதேபோல ‘பொய் சொல்லப் போறோம்’ படத்தில் கதாநாயகனாக நடித்த கார்த்திக் குமார் அதிலும்கூட தன்னை வித்தியாசப்படுத்திருந்தார். 2005ல் பிரபல பின்னணி பாடகி சுசித்ராவை திருமணம் செய்தார் கார்த்திக் குமார்.
தற்போது ‘கொலைகொலயா முந்திரிக்கா’, ‘கொலைநோக்குப் பார்வை’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துவரும் கார்த்திக் குமாருக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.