கல்லூரி மாணவர்கள் என்றால் அவர்களுக்குள் கருத்து மோதல்கள் மற்றும் சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும் அதை அவர்களே பேசி தீர்த்துக்கொள்ள முடியும் தான். ஆனால் அதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அந்த பிரச்சனையை பெரிதாக்கி அதன் மூலம் அரசியலில் தன்னை வளர்த்துக் கொள்ள நினைக்கிறான் ஒருவன். அதிலிருந்து மாணவர்கள் மீண்டார்களா? என்பதை கருவாக வைத்து உருவாகி இருக்கும் படம்தான் ‘விடியும்வரை விண்மீன்களாவோம்’.
கதாநாயகர்களாக B.விஜய்குமார், ஜெயகாந்தன், சிவபெருமாள், சந்துரு ஆகியோர் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக நேகா, ஹென்னா நடிக்கிறார்கள். ஹென்னா ஏற்கனவே மலையாளத்தில் நான்கு படங்களில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரித்து இயக்கியுள்ளதோடு கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்துள்ளார் B.விஜய்குமார். இவர் அமெரிக்காவில் போய் படித்து முடித்து குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்கள் இயக்கி அந்த அனுபவத்தில் படத்தை இயக்க தன்னை தயார்படுத்திக் கொண்டு ‘விடியும் வரை விண்மீன்களாவோம்’ படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.