மார்ச்-18ல் ‘வெற்றிவேல்’ இசைவெளியீடு..!

169

vetrivel 1
‘தாரை தப்பட்டை’ படத்தை தொடர்ந்து சசிகுமார் நடித்துள்ள படம் தான் ‘வெற்றிவேல்’.. இப்படத்தில் சசிகுமார் ஜோடியாக மியா ஜார்ஜ் நடிக்க, இவர்களுடன் பிரபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புதுமுக இயக்குநர் வசந்தமணி இயக்கி இருக்கிறார். கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைத்து வருகிறார்.

தஞ்சாவூரில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்திருக்கிறார்கள். தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வரும் மார்ச்-18ஆம் தேதி படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்துவதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.. லைக்கா நிறுவனம் வெளியிடும் இந்தப்படம் ‘சுந்தரபாண்டியன்’ பாணியிலான அனைத்து தரப்பினரையும் கவரும் கதை தான் என்கிறது படக்குழு.

Comments are closed.