கலாபவன் மணியின் இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்ட விக்ரம்..!

231

Mohanlal - mammootty - vikram in kalabavan mani mour

சமீபத்தில் மலையாள நடிகர் கலாபவன் மணியின் மரணம் மலையாள திரையுலகை மட்டுமல்ல, தமிழ்த்திரையுலகையும் சேர்ந்தே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நேற்று கொச்சியில் மலையாள நடிகர்சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி கலாபவன் மணிக்கு இரங்கல் கூட்டம் நடத்தினர்.. இதில் மம்முட்டி, மோகன்லால் உட்பட அனைத்து நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர்.. இதில் நடிகர் விக்ரமும் கலந்துகொண்டார்.

தமிழ்சினிமாவில் கலாபவன் மணியின் திக் பிரண்ட் என்றால் விக்ரம் தான். கலாபவன் மணி நடித்த படத்தை இங்கே தமிழில் ரீமேக் பண்ணி நடித்து பெயர்பெற்ற விக்ரம், தொடர்ந்து ‘ஜெமினி’ படத்தில் கலாபவன் மணியுடன் இணைந்து நடித்தார்.. ஆனாலும் அதற்கு முன்பே விக்ரம் மலையாளத்தில் நடித்துவந்த சமயத்தில் இருந்தே கலாபவன் மணியுடன் நல்ல நட்பில் இருந்தவர்.. அதனால் தமிழ் திரையுலகில் இருந்து இந்த இரங்கல் கூட்டத்தில் விக்ரம் கலந்துகொண்டதில் வியப்பேதும் இல்லை.

Comments are closed.