”’வீரம்’ பற்றி இப்போது பேசுவது விவேகமல்ல.”- இயக்குனர் சிவா.

179

அட்டகாசமாக தயாராகி வருகிறது அஜீத்தின் வீரம். படத்தில் அபிநயாவிற்கு முக்கிய ரோல் கொடுக்க சொல்லி அஜீத் சிபாரிசு செய்திருக்கிறார். ‘விஸ்வரூபம்’ படத்தில் இடம் பெற்ற மிரட்டலான சண்டைக் காட்சி எல்லோராலும் பாராட்டபட்டது. அது போன்ற ஒரு சண்டைக் காட்சியை வீரம் படத்திலும் வைக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் கேட்டதற்கு “அபிநயா நடிக்கிறாங்க உண்மைதான். மற்றபடி வீரம் படத்தை பற்றி இப்போது பேசுவது சரியாக இருக்காது. காரணம் ’ஆரம்பம்’ படம் நல்லபடி வெளியாகி வந்த பிறகு வீரம் பற்றி பேசச்சொல்லியிருக்காங்க.” என்று முடித்துக் கொண்டார் சிவா.

Leave A Reply

Your email address will not be published.