‘முள்ளும் மலரும்’, ’உதிரிப்பூக்கள்’ உட்பட மனதை கொள்ளை கொள்ளும் படங்களை தந்தவர் இயக்குனர் மகேந்திரன். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் ஒரு காவியம் படைக்க வருகிறார். இது பற்றி அவரிடம் கேட்ட போது, ”புது கதை ஒன்று ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்துகிட்டிருக்கு. எல்லாம் முழுமையாக முடிந்த பிறகு நானே உங்களுக்கு சொல்றேன். இன்னும் சிலர் குமுதம், பொங்கல் மலரில் நான் எழுதின ‘வாசனை’ சிறுகதையை படித்துவிட்டு அதையே படமாக்கலாமே என்கிறார்கள்’ அந்த ஐடியாவும் இருக்கு, பார்க்கலாம்.” என்ற மகேந்திரன் அவரின் மனம் கவர்ந்த ஒளிப்பதிவாளர் அசோக்குமாரை பற்றி விசாரித்து விட்டு, “அப்படியொரு டெக்னீசியனை தேடிகிட்டிருக்கேன்.” என்று பெருமிதப்பட்டார்.