’களவாடிய பொழுதுகள்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்து பல மாதங்கள் ஆகியும் மீண்டும் வெளி வருவதில் சிக்கலாகியிருப்பதை போல் தெரிகிறது. இது குறித்து இயக்குனர் தங்கர் பச்சானிடம் கேட்டோம், “வரும் நாலாம் தேதியில் வெளியிடலாம்னு திட்டமிட்டிருந்தோம். வரிசையா பல படங்கள் வெளியாகுது. அதனால நாம இப்ப வரவேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம். ஒரு நல்ல படைப்பை உருவாக்குறதில் உள்ள கஷ்டத்தை விட அதை மக்கள் மத்தியில் கொண்டு வருவதற்கு நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கு. அது வரைக்கும் அந்த படைப்பை அந்த கலைஞனே தூக்கி சுமக்க வேண்டியிருக்கு. இது தான் இன்றைக்கு நடந்துகிட்டிருக்கு’” என்று ஆதங்கத்தோடு பேசினார் தங்கர்.