சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் வீரம் படத்தில் அவ்ருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார் என்பது தெரியும். அவரது தம்பிகளில் ஒருவராக விதார்த் நடிக்கிறார் என்பதும் தெரியும். ஆனால் அஜீத்தின் நண்பனாக நடிப்பவர் சந்தானமோ சூரியோ இல்லை. ரமேஷ்கண்ணா தான் அந்த கேரக்டரில் நடிக்கிறார்.
அஜீத்துக்கும் ரமேஷ்கண்ணாவுக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது. வில்லன், வரலாறு, அட்டகாசம் என மூன்று படங்களில் அஜீத்தின் நண்பராக ஏற்கனவே நடித்துள்ளார் ரமேஷ்கண்ணா. இதுதவிர 14 வருடங்களுக்கு முன்பே அஜீத், தேவயானியை வைத்து ‘தொடரும் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். ரமேஷ் கண்ணா இயக்கிய முதல்படமும் ஒரேபடமும் அதுதான்.
அது மட்டுமல்ல வில்லன், வரலாறு படங்களில் இவர்கள் இருவரின் காமெடிக்கூட்டணி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல வீரம் படத்திலும் இருவரும் சேர்ந்து கலக்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.