ராஜமவுலியின் கதையில் நடிக்கிறார் திலீப்

90

தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் 2010ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் மரியாத ராமண்ணா. தெலுங்கில் காமெடி நடிகராக வலம் வந்த சுனிலை இந்தப்படத்தின் மூலம் ஹீரோவாக மாற்றிக்காட்டினார் ராஜமவுலி. சூப்பர்ஹிட்டான இந்தப்படத்தை கன்னடத்திலும் பெங்காளியிலும் ரீமேக் செய்தார்கள்.

இந்தப்படத்தின் பவர்புல் கதையை கேள்விப்பட்ட நடிகர் அஜய் தேவ்கன் கடந்தவருடம் இந்தப்படத்தின் இந்தி ரீமேக்கான சன் ஆஃப் சர்தார் படத்தில் நடித்து அங்கேயும் சூப்பர்ஹிட்டாக்கினார். தமிழில் சந்தானம் நடிப்பில் இந்தப்படம் ரீமேக் செய்யப்படுவதாக ஒரு தகவல் வெளியாகி இன்னும் உறுதி செய்யப்படாமலேயே உள்ளது

தற்போது இந்தப்படம் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. சுனில் கேரக்டரில் நடிக்கிறார் நடிகர் திலீப். கிருஷ்ணகுமார் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.