
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டி இருந்தது. இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என பலரும் சந்தேகத்துடன் நகம் கடித்து காத்திருந்த வேளையில், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நிபந்தனைகளுடன் நீக்கியுள்ளது… ஆகவே இந்த வருடம் ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும்.. இதுபற்றி கவிஞர் வைரமுத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளார்.
“தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது. வேளாண்மைக் கலாசாரத்திலிருந்து மாடு விடுதலை பெற்று விட்டது. ஏறு தழுவுதல் மட்டுமே அதில் மிச்சமாக இருக்கிறது. அந்த உரிமை மீட்டெடுக்கப் பட்டது மகிழ்ச்சி தருகிறது. அந்த உரிமைக்காகப் போராடியவர்களுக்கும் மீட்டுத் தந்த பெருமக்களுக்கும் மகிழ்ச்சியோடு நன்றி சொல்கிறேன். இது நிரந்தரமான உரிமையாக வேண்டுமென்றால் முறைப்படியான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.” என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் வைரமுத்து.
Comments are closed.