
சசிகுமார் இயக்கத்தில் வெளியான ‘ஈசன்’ படத்தில் இடம்பெற்ற பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகிய ‘ஜில்லா விட்டு ஜில்லா வந்து’ பாடலை எழுதியவர் பாடலாசிரியர் மோகன்ராஜன். தொடர்ந்து ஐந்து வருடங்களாக பாடல் எழுதிவரும் இவர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்திலும் ‘வதன வதன வடி வடிவேலனே’ என்கிற பாடலை எழுதியுள்ளார்.
இந்தப்பாடலை வாசித்த இசைஞானி இளையராஜா, அதில் ஒரு திருத்தம் கூட சொல்லாமல் நன்றாக எழுதியிருக்கிறாய் என இவரை பாராட்டியுள்ளார். அதனால் மகிழ்ச்சியான இயக்குனர் பாலா, இவருக்கு ஒரு கைக்கடிகாரம் பரிசளித்து கௌரவித்துள்ளார். ‘சண்டிவீரன்’ படத்தில் இவர் எழுதிய ‘தாய்ப்பாலும் தண்ணீரும்’ என்கிற பாடலை பார்த்து தான் தனது படத்தில் பாடல் எழுத வாய்ப்பு வழங்கினாராம் பாலா.
Comments are closed.