யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வடிவேலு மீண்டும் ‘எலி’ படத்தில் நடித்து வருகிறார் இல்லையா..? இந்தப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை டாம் அன்ட் ஜெர்ரி ஸ்டைலில் படமாக்கியிருக்கிறார்களாம். அதாவது பூனைகள் துரத்தும்போது எலி எப்படி சமாளிக்குமோ, அதே பாணியில் எதிரிகளுடன் மோதுகிறாராம் வடிவேலு.
சூப்பர் சுப்பராயன் வடிவமைத்துள்ள இந்த பிரம்மாண்டமான சண்டைக்காட்சியில் நகைச்சுவையால் அசத்தியிருக்கிறாராம் வடிவேலு.. 1960களின் பிண்ணனியில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்-5ல் தொடங்கி இரவுபகலாக இடைவிடாமல் நடைபெற்று வருகிறது.
இதற்காக பின்னி மில் வளாகத்தில் அமைக்க பெற்ற நட்சத்திர வீடு, பழமையான வீடுகள், பிரமாண்டமான வீடுகளின் உள்கட்டமைப்புகள், வில்லனின் ரகசிய இருப்பிடம் என 15க்கும் மேற்ப்பட்ட பிரம்மாண்ட அரங்குகள் கோடிகணக்கில் கலை இயக்குனர் தோட்டாதரணியால் அமைக்கப்பட்டு, வசன காட்சிகள் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
வடிவேலுவுக்கு ஜோடியா என்றெல்லாம் யோசிக்காமல் இந்தப்படத்தின் கதையையும், தனது புதுவிதமான கதாபாத்திரத்தையும் கேட்டு கதாநாயகியாக நடிக்க சம்மதித்துள்ள நடிகை சதா, கவர்ச்சியிலும் காமெடியிலும் விருந்து படைக்க இருக்கிறார். தொடர்ந்து படப்பிடிப்பில் இருக்கும் எலி, சம்மர் ட்ரீட்டாக மே மாதம் திரைக்கு வருகிறது.
Comments are closed.