அட்டகத்தி தினேஷுடன் அமரகாவிய நாயகி இணையும் ‘ஒரு நாள் கூத்து’..!

118

 

‘திருடன் போலீஸ்’ படத்தை தொடர்ந்து அந்தப்படத்தை தயாரித்த கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஒருநாள் கூத்து’ படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார் அட்டகத்தி தினேஷ். அமரகாவியம்’ அழகு நாயகியான மியா ஜார்ஜ் இதில் தினேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அறிமுக இயக்குனரான நெல்சன் இந்தப்படத்தை இயக்குகிறார்.

கருணாகரன், பாலசரவணன், முண்டாசுப்பட்டி ராமதாஸ் என மூன்று காமெடி நடிகர்களும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்திற்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன் தான் இந்தப்படத்திற்கும் இசையமைக்கிறார். கிராமத்து கதையாக உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கலை சுற்றியுள்ள கிராமங்களில் படமாக இருக்கிறது.

 

Comments are closed.