நல்ல படங்கள் என்றால் நேரம் ஒதுக்கி பார்ப்பதோடு மனம் திறந்து பாராட்டுவதில் சூப்பர் ஸ்டார் ரஜினி எப்போதும் வஞ்சனை வைப்பதேயில்லை. ஆனால் ஜே.எஸ்.கே பிலிம்ஸின் ‘குற்றம் கடிதல்’ படத்தை பார்க்கவிட்டாலும்கூட, தற்போது அதற்கு தேசியவிருது கிடைத்த செய்தி கேட்டு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் ரஜினி.
“இந்த நொடிப்பொழுது மிக சந்தோஷமாக உள்ளது. இந்திய திரையுலகின் தலைசிறந்த கலைஞர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திறமைசாலிகளை கண்டறிந்து பாராட்டுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அதனால்தான் அவர் என்றும் சூப்பர் ஸ்டார்” என தயாரிப்பாளர் சதீஷ்குமார் பெருமிதத்துடன் கூறியுள்ளார்
Comments are closed.