
கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை படங்களின் மூலம் சாதாரண மனிதர்களின் வாழ்வியலை எதார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் தன்னுடைய திரைப்படங்களில் பதிவு செய்பவர் இயக்குனர் சீனு ராமசாமி.
தற்போது தான் இயக்கிவரும் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தையும் மண்மணம் சார்ந்தே இயக்கிவருகிறார். அதனால் தான் அவரது பணியை பாராட்டும் விதமாக 125 வருடம் பாரம்பரியம் மிக்க மதுரைக்கல்லூரி பண்பாட்டுக்கழகம் சீனு ராமசாமிக்கு மக்கள் இயக்குனர் என்னும் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
“வாழும் காலத்தில் பட்டப்பெயர்களை அடைமொழிகளை உடுத்திக் கொண்டு வாழ்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு மனிதனின் மறைவிற்கு பிறகு அவன் இந்த சமூகத்திற்கு பயன்பட்ட விதத்தில் மக்கள் தரும் பட்டப்பெயர்களே நிரந்தரமானவை. இருந்தாலும் மதுரையில் மதிப்புமிக்க மதுரைக் கல்லூரியின் கல்விக்குழுமம் வழங்கும் இவ்விருதினை ஏற்றுக்கொள்கிறேன். இதன்மூலம் என் பொறுப்புணர்ச்சியும் கூடுகிறது” என்று கூறியுள்ளார் சீனு ராமசாமி.
Comments are closed.